பத்துவீடு இருந்தா தப்பா? - சீறும் ப்ரியங்கா

By Shankar

Priyanka Chopra
எனக்குப் பத்து வீடு இருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அப்படியே பத்து வீடுகள் வைத்திருந்தால் என்ன தவறு... நான் உழைத்து சம்பாதித்ததுதானே அவை? என கேட்டுள்ளார் ப்ரியங்கா சோப்ரா.

இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் வீட்டில் சமீபத்தில் வருமான வரி சோதனை நடந்தது. இதில் கணக்கில் காட்டாத கோடிக் கணக்கான சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயகின. அடுக்கு மாடி குடியிருப்பில் அவருக்கு பத்து வீடுகள் உள்ளதென்றும் கூறப்பட்டது.

இதுபற்றி பிரியங்கா சோப்ராவிடம் கேட்ட போது, மிகவும் கோபப்பட்டார். அவர் கூறுகையில், "வருமான வரி அதிகாரிகள் எனக்கு பத்து வீடுகள் இருப்பதை கண்டு பிடித்ததாக செய்தி வந்தது. அது தவறு. ஒரு படுக்கை அறை கொண்ட ஐந்து பிளாட்கள் இருந்தன. அவற்றை இடித்து ஒரே வீடாக கட்ட திட்டமிட்டு இருந்தேன்.

அப்படியே பத்து பிளாட்கள் இருந்தால்தான் என்ன? என் சொத்துக்கள் எல்லாமே நான் உழைத்து சம்பாதித்தவை. இரவு- பகல் வேலை பார்த்து தான் இவற்றை வாங்கினேன். கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் அதிகமான வரி கட்டிய நடிகை நான்தான்.

இந்த வயதிலேயே இவ்வளவு வரி கட்டியதை நினைக்கும் போது எனக்கு கர்வமாகத்தான் உள்ளது. வருமான வரி அதிகாரிகள் வந்தபோத என் காதலர் ஷாஹித்கபூர் எனது வீட்டில் இருந்ததாகவும் செய்தி பரப்பியுள்ளனர். அவர் அப்போது வீட்டில் இல்லை.

வருமான அதிகாரிகள் வந்த பிறகுதான் போன் செய்து அவரை வரவழைத்தேன். சோதனையின்போது அதிகாரிகள் எனக்கு தொந்தரவு கொடுக்கவில்லை. மரியாதையாக நடத்தினார்கள். கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னேன். சோதனை எனக்கு கசப்பான அனுபவத்தை ஏற்படுத்தவில்லை.

அது அரசின் கடமை. நானும் பொறுப்புள்ள குடிமகளாக நடந்து கொண்டேன். சோதனையின் போது என் வீட்டில் இருந்து 45 ஆயிரம் ரூபாயை மட்டுமே எடுத்தனர். அது கூட நான் பெட்ரோல் போட வைத் திருந்த பணம்...", என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X