வழுக்கி விழுந்த தான்யா

By Staff
Dhanya
தடக் தடக் பட ஷூட்டிங்கின்போது பாறை மீது ஆடிக் கொண்டிருந்த நாயகி தான்யா, வழுக்கி கீழே விழுந்தார். நல்ல வேளையாக உடன் ஆடிய கலைஞர்கள் அவரைப் பிடித்துக் கொண்டதால் பெரிய பாதாளத்தில் விழும் அபாயத்திலிருந்து தப்பித்தாராம்.

திருடி படம் மூலம் நடிக்க வந்தவர் தான்யா. இப்போது அவர் தடக் தடக் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ரகுராம், சுந்தர் தயாரிப்பில் எஸ்.எஸ்.பிரகாஷ் இயக்கத்தில் புதுமுகம் பத்மகுமாருக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கிறார் தான்யா. படத்தின் ஷூட்டிங் கேரளாவில் உள்ள மலைப் பகுதியில், நடந்து வருகிறது.

ஒரு பாடல் காட்சியில் நடனமாட தான்யாவை மட்டும் உயரமான பாறையின் மீது ஏற்றி விட்டனர். மற்ற நடனக் கலைஞர்களை கீழே நின்று ஆட வைத்து படமாக்கிக் கொண்டிருந்தார் இயக்குநர்.

தான்யா ஆடிக் கொண்டிருந்த பாறைக்கு கீழே பாதாளத்தில் பெரிய அருவி பாய்ந்து கொண்டிருந்தது. தான்யா ஆடிக் கொண்டிருந்த பாறை ஈரமாக இருந்ததால் அவர் நழுவி கீழே விழுந்து விட்டார்.

தான்யா அதல பாதாளத்தில் பாயந்து கொண்டிருந்த அருவியில் விழுந்து விட்டாரோ என நினைத்து அனைவரும் அய்யோ அய்யோ என்று கூச்சலிட்டனர். ஆனால் நல்ல வேளையாக சக நடனக் கலைஞர்கள் தான்யாவைப் பிடித்துக் கொண்டதால் அவர் உயிர் தப்பினார்.

இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பாகி விட்டது. பிறகு தேங்காய் ஒன்றை உடைத்து, சூடம் ஏற்றி திருஷ்டி கழித்து விட்டு மறுபடியும் படப்பிடிப்பைத் தொடர்ந்தனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X