காவ்யா மிரண்டால் கிளாமர்!

சித்திக்கின் முதல் இரு படங்களான பிரண்ட்ஸ் மற்றும் எங்கள் அண்ணா இரண்டுமே சூப்பர் ஹிட். இரு படங்களிலும் காமெடி கலகலப்பாக இருந்தது. அதேபோல மூன்றாவது படமான சாது மிரண்டால் படத்திலும் காமெடிதான் கலக்கலாக வந்திருக்கிறதாம்.
காவ்யா மாதவன் இப்படத்தின் நாயகியாக நடித்துள்ளார். நாயகனாக நடித்திருப்பவர் பிரசன்னா.
5 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் காவ்யா தமிழுக்கு வருகிறார். தீபக் தேவ் என்ற புதுமுகம் இசையமைத்துள்ளார். சித்திக் மலையாளத்தில் இயக்கிய சத்யம் சிவம் சுந்தரம் என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக்தான் இது. அந்தத் தெலுங்குப் படம் இதுவரை ரிலீஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் காவ்யா கிளாமராக நடித்துள்ளாராம். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின்போது காவ்யா பேசுகையில், தமிழில் தனி நாயகியாக நடிக்க வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசைப்பட்டு வந்தேன். இப்படத்தில் அது நிறைவேறியுள்ளது.
இப்படத்தில் எனது கேரக்டரை அனுபவித்து செய்தேன். இது எனக்கு தமிழில் நல்ல பிரேக்கைத் தரும் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.
முதல் முறையாக இப்படத்தில் நான் கிளாமராக நடித்துள்ளேன். இப்படம் வெற்றி பெற்றால் கிளாமர் கலந்து தொடர்ந்து நடிப்பேன் என்றார்.
குடும்பக் கதையுடன் கூடிய இப்படத்தில் காமெடி படம் நெடுகிலும் வருவதாக சித்திக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











