ரவியுடன் நடிக்க மறுத்த நடிகை!

தாமிரபரணியில் அறிமுகமாகி, சமீபத்தில் வெளியான அழகர் மலையில் நடித்தவர் பானு. மலையாள நடிகையான இவருக்கு ஜெயம் ரவியின் புதிய படமான தில்லாலங்கிடியில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாம்.
ஆனால் அதை வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.
காரணம்?
"எனக்கு கொஞ்சம்கூட பிடிக்காத, பொருத்தமில்லாத வேடம் அது. அதை எப்படி செய்வது? எக்கச்சக்கமாக கிளாமர் காட்ட வேண்டியிருக்கும் என்றார்கள். நான் குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன். அதனால் அந்த வேடத்தை மறுத்துவிட்டேன். இப்போதைக்கு வேறு தமிழ்ப் படங்கள் எதையும் நான் ஒப்புக் கொள்ளவில்லை.
ஆனால் மலையாளத்தில் நிறைய வாய்ப்புகள் நான் விரும்பியபடி அமைவதால் அங்கு தொடர்ந்து நடிக்கிறேன்!", என்கிறார் பானு.
Comments


Click it and Unblock the Notifications