மீனா கர்ப்பமா?

மீனா வயதையொத்த பல நடிகைகளுக்கும், நடிகர்களுக்கும் திருமணமாகி பிள்ளை குட்டிகளுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில் கட்டக் கடைசியாக மீனாவுக்குக் கல்யாணம் நடந்தது.
பெங்களூர் கணவருடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகிறார். அத்தோடு சினிமாவிலும், டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். ஆனால் தற்போது அவர் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடித்து வருகிறாராம். இதுவும் கூட முன்பே ஒத்துக்கொண்ட படமாகும்.
புதிய பட வாய்ப்புகளையும், டிவி தொடர்களையும் அவர்ஒப்புக் கொள்வதில்லையாம். இப்போது வேண்டாம். ஒரு வருடத்திற்குப் பிறகு பார்க்கலாம் என்கிறாராம்.
மீனாவிடம் ஏன் இந்த திடீர் மாற்றம் என்று தெரியவில்லையாம். ஒரு வேளை அவர் கர்ப்பமாக இருக்கலாமோ என்று திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள்.
சந்தோஷமான விஷயம்தானே...!


Click it and Unblock the Notifications











