சமூக சேவகியானார் நக்மா!

மும்பையிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து நடித்து, தெலுங்குக்கும் போய் பின்னர் இரண்டு மொழிகளிலும் வாய்ப்பிழந்து மீண்டும் மும்பைக்கு ரிட்டர்ன் ஆனவர் நக்மா.
இந்தியில் முயற்சித்துப் பார்த்து முடியாததால், அவர் போஜ்பூரி பக்கம் பார்வையைத் திருப்பினார். இப்போது போஜ்பூரியில் அவர் ஒரு சூப்பர் ஸ்டாரினி நடிகை.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட கடுமையாக முயன்றார் நக்மா. ஆனால் நக்மாவைப் பார்த்து யார் நீங்க என்று மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டதால் வெறுத்துப் போய் விட்டார் நக்மா.
சமீபத்தில் இளைஞர் காங்கிரஸில் தன்னை ஒரு உறுப்பினராக பதிவு செய்து கொண்டார் நக்மா. இந்த நிலையில் அடுத்து சமூக சேவகியாக அவதாரம் எடுத்துள்ளார் நக்மா.
போஜ்பூரி சினிமாதான் தனக்கு பெரும் உயர்வைக் கொடுத்தது என்பதால் போஜ்பூரி மக்களுக்காக உழைக்கப் போகிறாராம் நக்மா. இதற்காக உ.பியில் அவர் முகாமிட்டுள்ளார்.
போஜ்பூரி மொழி பேசும் மக்கள் உள்ள பகுதிகளின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்காக பாடுபடப் போவதாக கூறுகிறார் நக்மா.
இதுகுறித்து அவர் கூறுகையில், போஜ்பூரி படங்களில் நடித்துள்ளதால், எனக்கு போஜ்பூரி மக்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து நல்ல பரிச்சயம் உள்ளது.
நான் போஜ்பூரி மக்கள் வசிக்கும் பிராந்தியங்களுக்கு பலமுறை வந்துள்ளேன். இங்குள்ள மக்கள் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது.
இதற்காகவே நான் பாடுபடப் போகிறேன். இதற்காக பிரதேச கலா சங்கம் மற்றும் ஜாகிரிதி ஆகிய இரு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படப் போகிறேன் என்கிறார் நக்மா.


Click it and Unblock the Notifications











