ரித்து சோனியின் முதல் சவால்

By Chakra

Ritu Soni
முதல் படத்திலேயே சவாலான பாத்திரத்தில் நடித்திருப்பதாக பெருமையுடன் கூறுகிறார் விலை நாயகி ரித்து சோனி.

18 வயதே ஆகும் ரித்து, உதவி இயக்குநராக மகேஷ் பட்டிடம் பணியாற்றியவர். இப்போது நடிக்க வந்துள்ளார். பட்டிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் தற்போது நடிப்பில் தனக்கு பேருதவியாக கூறுகிறார் சிம்ப்ளி பியூட்டிஃபுல் ரித்து.

அமைதியான கண்கள், ஆர்ப்பாட்டமில்லாத அழகுடன் அருமையாக இருக்கும் ரித்து, விலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார். ஆனால் இவர் நடித்த முதல் படம் இந்தியில் வெளியான ஜாஷன்.

விலை படத்தின் நாயகனாக நடிப்பவர் பரணி. இவர் நாடோடிகள் படத்தில் சசிக்குமாரின் நண்பராக வந்து அசத்தியவர். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கவில்லை ரித்து, மாறாக, தங்கச்சியாக வருகிறார்.

விலை படத்தின் கதை குறித்து ரித்து கூறுகையில், பரணி எனது அண்ணனாக வருகிறார். திடீரென நான் காணாமல் போய் விடுகிறேன். பரணி என்னைத் தேட ஆரம்பிக்கிறார். ஆனால் நான் கிடைக்கவில்லை. என்னைத் தேடும் வேட்டையின்போது, ஆள் கடத்தல் கும்பல் குறித்த தகவல்கள் எனது அண்ணனுக்குக் கிடைக்கிறது. அதன் பின்னர் நடப்பதை இப்போது நான் சொல்ல முடியாது.

மிகவும் சவாலான கேரக்டர் எனக்கு. அழகான கேரக்டர், சிறப்பாக செய்திருப்பதாக கருதுகிறேன் என்கிறார் ரித்து.

தமிழ் சுத்தமாக வரவில்லை ரித்துவுக்கு. அதை அவரே ஒத்துக் கொள்கிறார். நிச்சயம், எனக்கு தமிழ் பரிச்சயமில்லாத மொழி. வசனம் பேச சிரமப்பட்டேன். முடிந்தவரை முயற்சித்தேன். விரைவில் தமிழ் கற்றுக் கொள்வேன் என்று அழகான ஆங்கிலத்தில் கூறுகிறார்.

'தமில் என்க்கு குஞ்சம் குஞ்சம் தெர்யும்' என்று கூறாமல் உண்மையாக பேசும் ரித்து பாராட்டப்பட வேண்டியவர்தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X