திருமணமானாலும் நாயகியாக நடிக்கலாம்! - பூமிகா

தங்கர் பச்சானின் இந்த வாய்ப்பின் மூலம் திருமணமான நடிகைகளும்கூட மீண்டும் முழுமையான நாயகியாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது, என்கிறார் பூமிகா.
களவாடிய பொழுதுகள் படப் பிடிப்புக்காக சென்னை வந்த பூமிகா அளித்த பேட்டி:
தங்கர்பச்சான் பற்றி நான் கேள்விப்பட்டது ஒன்று, ஆனால் நேரில் பார்ப்பது வேறுமாதிரியாக உள்ளது. அவரை முரட்டுத்தனமான மனிதர் என்றார்கள்.
ஆனால் உண்மையில் அவரைப் போன்ற சிறந்த கலைஞரைப் பார்ப்பது அரிது. நேர்மையான மனிதர்.
இந்தக் கதையை அவர் விளக்கியபோது எனக்கு மிகவும் பிடித்தது. ஜெயந்தி என்ற கேரக்டரில் நடிக்கிறேன். திருமணமான ஜோடியின் உணர்ச்சிகளை சித்தரிக்கும் கதை இது.
Comments
களவாடிய பொழுதுகள் சினிமா தங்கர் பச்சான் தமிழ் பூமிகா சாவ்லா bhoomika cinema kalavadiya pozhuthugal thankar bachan


Click it and Unblock the Notifications