சீதை வேடத்தில் ஐஸ்வர்யா
ஜோதா அக்பர் படத்திற்குப் பின்னர் மீண்டும் ஒரு வரலாற்றுப் படத்தில் நடிக்கப் போகிறார் ஐஸ்வர்யா ராய். இம்முறை அவர் போடப் போவது சீதை வேடம்.
ஹ்ரித்திக் ரோஷின் மாமனார் சஞ்சய் கான். இவர் ராமாயாணத்தை திரைப்படமாக்க முடிவு செய்துள்ளார். ராமர் வேடத்தில் மருமகன் ரோஷனையும், லட்சுமணன் வேடத்தில் மகன் சையத் கானையும் யோசித்து வைத்துள்ளார்.
சீதை வேடத்திற்கு அவர் முடிவு செய்துள்ளது ஐஸ்வர்யா ராயை. இதுதொடர்பாக ஐஸ்வர்யாவை அவர் அணுகியுள்ளாராம். கூடவே அமிதாப்பச்சனுக்கும் படத்தில் முக்கிய வேடம் கொடுக்கப்படவுள்ளதாம்.
தி லிஜென்ட் ஆப் ராமா என்ற பெயரில் இப்படம் உருவாகவுள்ளது. பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படும் இப்படத்திற்காக 3 ஆண்டுகள் பல்வேறு விதமான முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொண்டாராம் சஞ்சய் கான்.
அனைத்துக் கலைஞர்களையும் இறுதி செய்த பின்னர் இப்படம் குறித்த அறிவிப்புகளை சஞ்சய் கான் வெளியிடுவாராம்.


Click it and Unblock the Notifications











