தமிழில் நிறைய நடிக்க ஆசை- ஐஸ்வர்யா ராய்

உலக அழகிப் பட்டம் வென்ற பின்னர் சினிமாவுக்குள் நுழைந்தார் ஐஸ்வர்யா. தமிழ் மூலமாகத்தான் அவர் நடிகையானார். இருவர் படம்தான் அவரது சினிமா முகவரி. இதையடுத்து ஜீன்ஸ் படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
தொடர்ந்து இந்தியில் நுழைந்த அவர் இந்தியில் இன்றளவும் முன்னணியில் இருக்கிறார். இடையில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்தார் ஐஸ்வர்யா. தற்போது மீண்டும் தமிழ் பக்கம் அவரது பார்வை திரும்பியுள்ளது.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் எந்திரன் படத்தில் நடித்துக் கொண்டுள்ள ஐஸ்வர்யா, மணிரத்தினத்தின் இயக்கத்தில் ராவணன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழில் நடிப்பது மிகவும் சவுகரியமாக இருப்பதாக கூறியுள்ள ஐஸ்வர்யா எதிர்காலத்தில் நிறையத் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழில் நடிப்பது சவுகரியமாக இருக்கிறது. எதிர்காலத்தில் நிறையத் தமிழ்ப் படங்களில் நடிப்பேன் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











