தமன்னாவின் 'ஜப் வி மெட்'!

மோசர் பேர் நிறுவனம் தயாரகிக்கும் இந்தப் படத்தில் முதலில் தனுஷ்-த்ரிஷா நடிப்பார்கள் எனக் கூறப்பட்டது.
ஆனால் இப்போது ஜோடியே முழுவதுமாக மாறிவிட்டது. தனுஷ்-த்ரிஷா இருவருக்குமே கால்ஷீட் பிரச்சினை என்பதால், அவர்களுக்குப் பதில் பரத்- தமன்னா ஜோடி போடுகிறார்கள். இருவரும் இணைந்து நடிப்பது இதுதான் முதல் முறை.
கல்லூரிக்குப் பின் தேர்ந்தெடுத்து படங்களை ஒப்புக் கொண்டு வரும் தமன்னா, ஆனந்த தாண்டவம், அயன், படிக்காதவனுக்குப் பிறகு நடிக்கவிருக்கும் படம் இது.
பரத் தற்போது சேவல், திருத்தணி உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார். ஹரியின் இயக்கத்தில் உருவாகிவரும் சேவல் தீபாவளிக்கு வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











