Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
த்ரிஷாவை ஓரம்கட்டிய பிரம்மானந்தம்!!
இங்கே வடிவேலு ரேஞ்சுக்கு தெலுங்கில் கலக்கி வருபவர் பிரம்மானந்தம். முன்னணி நடிகர்கள் அனைவரும், தங்கள் படங்களில் பிரம்மானந்தம் கட்டாயம் இருக்க வேண்டும் என நிபந்தனையே விதிக்கின்றனராம்.
தமிழில் கில்லி, மொழி, சரோஜா போன்ற படங்களில் நடித்தார். இப்போதும் பல தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் - தெலுங்கில் அவருக்கு கிடைத்துவரும் வரவேற்பைப் பார்த்த தயாரிப்பாளர்கள் அவர் கேட்கும் முன்பே சம்பளத்தை அள்ளித் தருகிறார்களாம்.
நமோ வெங்கடேசா என்ற தெலுங்குப் படத்தில் நடிக்க பிரம்மானந்தத்துக்கு நாளொன்றுக்கு ரூ 3 லட்சம் என நிர்ணயித்துள்ளார்கள். இந்தப் படத்துக்கு மொத்தம் ரூ.80 லட்சத்துக்குமேல் தரப்பட்டதாம் பிரம்மானந்தத்துக்கு. ஆனால் த்ரிஷாவுக்கு இதைவிட குறைவாக ரூ.60 லட்சம்தான் சம்பளமாகத் தந்தார்களாம்.
பொதுவாக தமிழ்ப்படங்களில்தான் கதாநாயகியை விட நகைச்சுவை நடிகருக்கு மவுசு கூடுதலாக இருக்கும். இங்கே நடிகர் வடிவேலு மட்டும் ஒரு நாளைக்கு சம்பளமாக ரூ.7 லட்சம் வாங்குகிறாராம். சில நேரங்கலில் ரூ.5 லட்சத்துக்கும் ஒப்புக் கொள்கிறாராம், தயாரிப்பாளரைப் பொறுத்து.
இந்த நிலை இப்போது தெலுங்கிலும் உருவாகியுள்ளது.