கோபிகாவின் ஐஸ்லாந்து ஹனிமூன்!

ஏற்கெனவே இந்த வேலையை அவர் துவங்கிவிட்டாலும், திருமணத்துக்குப் பிறகுதான் மிகத் தீவிரமாக கற்றுக் கண்டு வருகிறாராம்.
திருமணம் முடிந்ததுமே தேனிலவுக்காக வெளிநாடு கிளம்பத் திட்டமிட்டிருந்த அவரது கணவர் டாக்டர் அஜிலேஷ், மனைவியின் சமையல் கோச்சிங் முடியும் வரை காத்திருக்கிறாராம்.
இப்போதைக்கு கொச்சி, அதிரப்பள்ளி, மூணாரு என கேரள அழகைப் பருகுவதில் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர் புதுமணத் தம்பதிகள். விரைவிலேயே தேனிலவுக்காக ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்ஜாவிக் செல்லப் போகிறார்களாம். பின்னர் மத்திய தரைக்கடல் நாடுகளுக்கும் ஒரு விசிட் அடிக்கும் திட்டமும் உள்ளதாம்.
ஆரம்பத்தில், திருமணத்துக்குப் பிறகு சினிமாவா... நோ சான்ஸ் எனக் கூறிவந்த கோபிகாவிடம், இப்போது சின்ன மாறுதல். இப்போதைக்கு நடிக்கும் மதிட்மே இல்லை. முதலில் டப்ளினுக்குப் போகிறேன். பின்னர் உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறேன் என பிரபல மலையாள நாளிதழுக்கு அவர் இரு தினங்களுக்கு முன் பேட்டியளித்துள்ளார்.
ஒரு கூடுதல் தகவல்: கோபிகா நடித்த ஒரு படத்தைக் கூட இதுவரை அவரது கணவர் அஜிலேஷ் பார்த்ததே இல்லையாம்...
ரொம்ப நல்லதாப் போச்சி, தப்பிச்சாங்க சேச்சி!!


Click it and Unblock the Notifications











