நான் செக்ஸ் சிம்பல் அல்ல - கல்கி

பிரெஞ்சுப் பெற்றோருக்குப் பிறந்தவர் கல்கி. விஷணு பகவானால் ஈர்க்கப்பட்ட இவர் தனது பெயரை கல்கி கோச்லின் என மாற்றிக் கொண்டார்.
இப்போது கல்கி பாலிவுட்டில் ஒரு நடிகை. தேவ் டி என்ற படத்தில் விபச்சாரத்தில் ஈடுபடும் மாணவியாக நடித்துள்ளார். 26 வயதாகும் கல்கி அடுத்து நசிருதீன் ஷாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
நீங்கள் செக்ஸ் சிம்பலா என்று அவரிடம் கேட்டால், செக்ஸ் சிம்பல் என்று அழைப்பதை நான் விரும்பவில்லை. அது ஒரு மாதிரியாகவும் இருக்கிறது. என்னை அப்படி நான் நினைத்துக் கொள்ளவும் இல்லை என்றார்.
இதற்கிடையே, பெயரிடப்படாத புதிய படத்திற்கு இவர் திரைக்கதையிலும் உதவியுள்ளாராம். என்னை விட நல்ல திரைக்கதாசிரியர் கல்கி என்று பாராட்டுகிறார் அப்படத்தின் இயக்குநர் அனுராக் காஷ்யப். இவர் கல்கியின் பாய்பிரண்ட் என்பது கூடுதல் தகவல்.
Comments
கல்கி கோச்லின் செக்ஸ் முத்திரை தேவ் டி பாலிவுட் விபச்சாரப் பெண் bollywood dev d kalki koechlin prostitute sex symbol


Click it and Unblock the Notifications