எனக்கு ஜீன்ஸ்தான் பெஸ்ட் - நமீதா

By Staff

Namitha
எனக்கு சேலை சரிவராது. ஜீன்ஸ்தான் பொருத்தமாக இருக்கும். இதனால்தான் நான் சேலை கட்டிக் கொண்டு வருவதில்லை. கவர்ச்சிகரமான மாடர்ன் உடைகளில் வருவதையே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் நமீதா.

திரைப்படங்களில் மட்டுமல்லாது, திரையுலக விழாக்களுக்கும் கவர்ச்சிகரமாக வருவதையே வழக்கமாக வைத்துள்ளார் நமீதா. இதனால் பல விமர்சனங்கள், சர்ச்சைகள் ஏற்பட்டாலும் அதுகுறித்துக் கவலை காட்டுவதில்லை நமீதா.

ஏன் இந்த பிடிவாத போக்கு என்று அவரிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. சேலை எனக்கு சரிவராது, ஜீன்ஸ், மாடர்ன் டிரஸ்தான் பொருத்தமாக இருக்கிறது, வசதியாக இருக்கிறது. அதனால்தான் அப்படி வருகிறேன் என்கிறார் நமீதா.

சென்னை தீவுத் திடலில் தமிழக அரசின் சுற்றுலாத் துறை சார்பில் பனி மழை உலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பிராண்ட் அம்பாசடராக நியமிக்கப்பட்டுள்ளார் நமீதா.

இதுதொடர்பாக நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் நமீதா பேசுகையில், கடந்த 2004ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். ஆண்டுக்கு ஆண்டு கோடை வெயில் அதிகரித்து கொண்டே போகிறது. நிகழ்ச்சிகளுக்கு வரும்போது கவர்ச்சி உடை அணிந்து வருவது பற்றி பலர் கேட்கின்றனர். அதுதான் எனக்கு வசதியாக உள்ளது.

சேலை எனக்கு சரிவராது. எப்போதாவதுதான், அதாவது விழாக்கள், பண்டிகை போன்ற சமயங்களில்தான் சேலை அணிவேன். மற்றபடி புடவை எனக்கு செட் ஆவதில்லை. அசவுகரியமாக இருக்கிறது.

ஆண்களுக்கு லுங்கி எப்படி வசதியோ, அதுபோல எனக்கு ஜீன்ஸ்தான் பெஸ்ட். ஆண்களை போன்று பெண்கள் லுங்கி கட்டிக் கொண்டு வெளியில் வர முடியாது.

என் மீது ரசிககர்கள் அன்பாக இருக்கிறார்கள். இதனால்தான் நான் போகும் இடங்களில் எல்லாம் கூட்டம் திரண்டு விடுகிறது. அவர்களின் ஆர்வத்தைப் பார்த்து நான் சந்தோஷப்படுகிறேன். அவர்கள் என்னை முற்றுகையிடும்போது கூட கோபம் வருவதில்லை.

இந்திர விழா படத்தில் நான் மலைப்பாம்புடன் நடித்துள்ளேன். முதலில் பயமாகத்தான் இருந்தது. ஆனால் பிறகு பழகி விட்டேன். தோளில் போட்டுக் கொண்டு டான்ஸ் ஆடியுள்ளேன். இயற்கையிலேயே நான் துணிச்சல் மிக்க பெண் என்கிறார் நமீதா.

சமீபத்தில் ஒரு படப்பிடிப்பின்போது கூட நடித்த ஹீரோ நடிகர் நமீதாவுக்கு அடுத்தடுத்து எஸ்.எம்.எஸ். அனுப்பினாராம். இதனால் டென்ஷன் ஆன நமீதா, தனது செல்போனை கீழே போட்டு உடைத்து விட்டாராம். உண்மையா நமீதா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X