இலியானாவுக்கு 'பே ஹைக்'

தெலுங்குத் திரையுலகில் ஆண் சூப்பர் ஸ்டார்களுக்கே கடும் போட்டியாக கிராக்கி கூடிக் கொண்டு வருகிறது இலியானாவுக்கு. அவரது கால்ஷீட் கிடைக்க கடும் தவம் இருக்க வேண்டி வரும் போல எதிர்காலத்தில்.
எதிர்ப்புகளை எல்லாம் தனது இடுப்பசைவால் தூக்கி தூர எறிந்து விட்டு படு வேகமாக டாப்புக்குப் போய் விட்டார் இலியானா.
இலியானாவுக்கு முன்பு முதலிடத்தில் இருந்த திரிஷா, இப்போது அந்த இடத்திலிருந்து இறக்கி விடப்பட்டு விட்டார். விட்ட இடத்தைப் பிடிக்கலாம் என்றால் இலியானாவின் டாமினேஷனைத் தாண்டி எட்டிப் பார்ப்பதே பெரும் காரியமாகப் போய் விட்டது.
ஏற்கனவே ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் பெரும் நாயகி என்ற பெருமையை முதலில் பெற்றவர் இலியானா. இப்போது இன்னும் கால் கோடியை ஏற்றி விட்டாராம்.
நாகார்ஜூனாவுடன் புதிதாக நடிக்கவுள்ள படத்திலிருந்து இதுதான் இலியானாவின் சம்பளமாம். இனிமேல் இந்த சம்பளத்திற்கு மட்டும்தான் நடிப்பாராம்.


Click it and Unblock the Notifications











