இன்னும் வீட்டை காலி பண்ணல!- ஆசின்

வோக் (Vogue) என்ற ஆங்கில ஃபேஷன் பத்திரிகையின் ஜூலை மாத அட்டையில் நடிகை ஆசின் இடம் பெற்றுள்ளார். இந்தப் பத்திரிக்கையின் அட்டையில் தோன்றிய முதல் தென்னிந்திய நடிகை இவர்தான்.
தான் அட்டையில் தோன்றிய அதே இதழை, சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள லேண்ட்மார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார் ஆசின்.
இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆசின், தான் ஒரேயடியாக மும்பைக்குப் போய்விட்டதாகக் கூறப்படுவது தவறு என்றும், இன்னமும் சென்னை வீட்டைக் காலி செய்யவில்லை என்றும் கூறினார்.
தமிழில் இப்போதைக்கு எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை என்பது உண்மைதான் அதற்காகப் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று அர்த்தமல்ல. நிச்சம் இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஒரு தமிழ்ப் படம் நிச்சயம் என்றார் ஆசின்.
இந்தி கஜினியில் நீங்கள் நடிக்கப் போய் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் அந்தப் படம் வந்தபாடில்லை. தமிழில் என்றால் இந்நேரம் குறைந்தது 4 படங்கள் வந்கதிருக்குமே...
உண்மைதான். ஆனால் இந்திப் படங்களின் வீச்சு, வியாபார அளவே வேறு. நம்ம ஊர் இயக்குநர்தானே அந்தப் படத்தையும் இயக்குகிறார். நிச்சயம் இந்த ஆண்டு படம் வந்து விடும். அதன் பிறகுதான் புதுப்படங்களையே ஒப்புக்கொள்வது எனும் முடிவிலிருக்கிறேன், என்கிறார் ஆசின்.
முன்பு ஸ்ரீதேவி கொடுத்த அல்வாவை மிஞ்சிடும் போலிருக்கே இந்த ஆசின் அல்வா...


Click it and Unblock the Notifications











