கன்னடத்தில் சந்தியா

கன்னடத்தில் முன்னணி ஹீரோ சிவராஜ் குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார் சந்தியா. கன்னட பிரவேசத்தில் குஷியடைந்துள்ள சந்தியா கூறுகையில்,
தற்போது இயக்குனர்கள் எல்லோருமே கதைக்களங்களை வித்தியாசமாக யோசிக்கிறார்கள்.
இந்த கேரக்டரில் இந்த நடிகை நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதியே சம்பந்தப்பட்ட நடிகர் - நடிகைகளை அணுகுகிறார்கள். அந்த லிஸ்டில் என் பெயரும் இருப்பதில் எனக்குப் பெருமையே.
காதல்' படத்தில் தொடங்கி சமீபத்தில் திரைக்கு வந்த தூண்டில்' வரை நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய கேரக்டர்களாகவே எனக்கு தொடர்ச்சியாக அமைந்ததில் மகிழ்ச்சியே.
மரத்தைச் சுற்றிப் பாட்டுப் பாடும் வேலையெல்லாம் தற்போதைய சினிமாவில் அவுட்டேட் ஆகி விட்டது என்கிறார்.
ஏற்கனவே கன்னடப் படம் ஒன்றில் நடிக்க, தான் ஒப்பந்தமானதாகவும், அதன் இயக்குனர் திடீரென்று மறைந்து விட்டதால், அப்படம் கைவிடப்பட்ட நிலையில், தற்போது சிவராஜ் குமார் ஜோடியாக நடிப்பதாகவும் கூறியுள்ளார்.
சந்தியா நடிப்பில் மஞ்சள் வெயில்' விரைவில் திரைக்கு வருகிறதாம். மகேஷ், சரண்யா மற்றும் பலர்' படத்தில் 2 பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கியாம்.
'சந்தனக் காட்டுக்குப்' போயிருக்கிறார் சந்தியா, மார்க்கெட் 'மணக்கட்டும்'!


Click it and Unblock the Notifications











