ஸ்ருதியின் லக் 'அவுட்'!

இந்தப் படத்தில் ஸ்ருதியின் கவர்ச்சி மற்றும் திரைத் தோற்றம் பெருமளவு பாராட்டப்பட்டாலும், மோசமான திரைக்கதை காரணமாக, அவரது உழைப்பு வீணாகிவிட்டதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
படம் முழுக்க காட்சியமைப்பில் நவீனத்துவம் காட்டிய இயக்குநர் கதையமைப்பில் கோட்டா விட்டுவிட்டதால், படம் வெளியான இரண்டாவது நாளே ரசிகர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது.
சென்னையில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே வந்து படம் பார்க்கிறார்கள். கரண்ட் புக்கிங் கணிசமாகக் குறைந்துள்ளது.
படம் தோற்றாலும், ஒரு நடிகையாக ஸ்ருதி வெற்றிகரமாக தனது திரைப்பிரவேசத்தை தொடங்கியுள்ளார் என்கிறார்கள் விமர்சகர்கள். எனவே அவருக்கு வேறு சில இந்தி வாய்ப்புகளும் வந்துள்ளனவாம்.
அடுத்த கதையாவது நல்லதாக அமையட்டும்!.


Click it and Unblock the Notifications











