அழகுச் சிலை கரீனாவுக்கு லண்டனில் மெழுகுச் சிலை

பாலிவுட்டின் நம்பர் ஒன் ஹீரோயின் கரீனா கபூர். பெரிய படமா, கூப்பிடு கரீனாவ என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளார். நடிக்க வந்த புதிதில் கொளுக், மொழுக் என்றிருந்த கரீனா தற்போது சைஸ் ஜீரோவாக உள்ளார்.
லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் தங்கள் கனவுக் கன்னி கரீனா கபூரின் மெழுகுச் சிலையை வைக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பட்டாளம் வேண்டுகோள் விடுத்தது. இதையேற்று தற்போது கரீனாவுக்கு மெழுகுச்சிலை வைக்கப்படவுள்ளது.
கரீனா, ஆமிர் கானுடன் புதுவையில் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். அது முடிந்தவுடன் இங்கிலாந்து சென்று இது குறித்து அதிகாரிகளை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே மேடம் டுசாட்ஸில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஷாருக் கான், சல்மான் கான், ரித்திக் ரோஷன் மெழுகுச் சிலைகள் உள்ளன. இந்த வரிசையில் இப்பொழுது கரீனாவும் சேர்ந்துள்ளார்.
Comments
kareena kapoor london madame tussauds museum waxed statue லண்டன் மேடம் டுசாட்ஸ் மியூசியம் கரீனா கபூர் மெழுகுச் சிலை


Click it and Unblock the Notifications