மாளு அவுட்; நமீ இன்!

By Staff

Namitha
கார்த்தீகை படத்திலிருந்து மாளவிகாவைத் தூக்கிவிட்டு, அந்த வேடத்துக்கு நமீதாவை ஒப்பந்தம் செய்துள்ளனர் தயாரிப்பாளர் ஆஞ்சநேயலுவும் இயக்குநர் வீராவும்.

இன்னொரு பக்கம், நடிக்க பணம் வாங்கிக் கொண்டு ஒத்துழைக்க மறுத்ததற்காக மாளவிகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் வீரா கூறியதாவது:

எங்கள் படத் தயாரிப்பாளர் மீது மாளவிகா கூறியவை பொய்க் குற்றச்சாட்டுகள் என்பதை நடிகர் சங்கம் புரிந்து கொண்டுள்ளது.

நேற்று நடிகர் சங்கத்தினர் மும்பையிலிருக்கும் மாளவிகாவிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் தன் கணவர் ஓய்வு எடுக்கச் சொல்லி இருப்பதால் இனி படங்களில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார் மாளவிகா.

இத்தனைக்கும் அவர் 15 நாட்கள் நடித்துக் கொடுக்க வேண்டிய பகுதிகளை பத்தே நாட்களில் முடித்துக் கொடுப்பதாகக் கூறியும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இதற்காக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும், ராதாரவியுமே முன்னின்று பேசினர்.

ஆனால் கணவர் தன்னை ஓய்வெடுக்கச் சொல்வதால் நடிக்க முடியாது என கூறிவிட்டார் மாளவிகா.

இனி வேறு வழியில்லை என்பதால், அவருக்குப் பதில் நமீதாவை ஒப்பந்தம் செய்துள்ளோம்.

மாளவிகா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்கம் உறுதியளித்துள்ளது.

அவர் நடிக்காமல் போனதால் எங்களுக்கு ஏற்பட்டுள்ள ரூ.75 லட்சத்தை அவர் உடனடியாகத் தர வேண்டும். இல்லையேல் வழக்கு தொடருவோம். அதேபோல அவருக்கு வழங்கப்பட்ட சம்பளப் பணத்தையும் திருப்பிச் செலுத்த வேண்டும்.

இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை நினைவு கூர விரும்புகிறேன். ஷாலினியைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன் அவர் ஒப்புக் கொண்ட படங்களுக்கான கமிட்மெண்டுகளை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டு வருமாறு கூறி, அவர் வரும்வரை காத்திருந்தார் அஜீத். இன்றைய இளம் நடிகர் நடிகைகள் அவரை உதாரணமாகப் பின்பற்ற வேண்டும்.

மாளவிகாவுக்குத் தடை!:

இதுவரை நடிகை மாளவிகா 17 நாட்கள் இப்படத்தில் நடித்துள்ளார். இப்போது அதை வெட்டி வீசிவிட்டு நமீதாவை வைத்துப் புதிதாக எடுக்கிறேன். மாளவிகாவை விட நமீதா எவ்வளவோ மேல்.

அவர் நடிக்க ஒப்புக் கொண்டது எங்கள் படத்துக்கே புதிய பரிமாணத்தைக் கொடுத்துவிட்டது, என்றார் வீரா.

நடிகர் சங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்காததால் இனி தமிழ்ப் படங்களில் நடிக்க மாளவிகாவுக்குத் தடை விதிக்கப்படும் எனத் தெரிகிறது.

ஆனால் இந்தத் தடைக்காக மாளவிகா நிச்சயம் வருத்தப்பட மாட்டார். காரணம் அவர் குழந்தைப் பெற்று, பழையபடி குத்தாட்டத்துக்குத் திரும்ப குறைந்தது 3 ஆண்டுகளாவது ஆகும். நடிகர் சங்கத் தடை அது வரையா நீடிக்கும்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X