'தேவதாசி'யாக மீரா ஜாஸ்மின்!

By Staff

Meera Jasmine
மலையாளத்தில் சுத்தமாக வாய்ப்பு இல்லை. தமிழிலும் தந்தனத்தோம் நிலைமை. தெலுங்கிலும் சுகப்படவில்லை. இந்த நிலையில் கன்னடத்தில் பிசியாகிக் கொண்டிருக்கிறார் மீரா ஜாஸ்மின். ஒரு புதிய படத்தில் தேவதாசி வேடத்தில் நடிக்கப் போகிறார்.

மலையாள நடிகர் சங்கமான அம்மா தயாரிக்கும் டுவென்டி 20 படத்தில் நடிக்க மறுத்ததால் அங்கு மீராவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழிலும், தெலுங்கிலும் அவருக்கு முன்பு போல வாய்ப்பு இல்லை.

இந்த நிலையில் கன்னடத்தில் அவருக்கு நல்ல வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளனவாம். பிரபல இயக்குநர் எம்.எஸ்.சத்யுவின், புதிய படத்தில் தேவதாசி வேடத்தில் நடிக்கிறார் மீரா.

இந்த கேரக்டர் மிகவும் சிறப்பானது. அனுபவித்து நடித்து வருகிறேன் என்கிறார் மீரா உற்சாகத்துடன்.

இதேபோல தேவரு கொட்ட தங்கி (கடவுள் கொடுத்த தங்கை) என்ற படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரின் தங்கையாக நடிக்கவுள்ளாராம் மீரா.

இப்படத்ைத இயக்குபவர் ஓம் சாய் பிரகாஷ். இவர் தங்கை சென்டிமென்ட்டை வைத்து படம் இயக்குவதில் எக்ஸ்பர்ட். இதற்கு முன்பு சிவராஜ் குமாரை வைத்து இரு படங்களை இயக்கியுள்ளார் சாய் பிரகாஷ். இரண்டிலும் அவருக்கு தங்கையாக நடித்தவர் குட்டி ராதிகா. இப்போது குட்டி ராதிகா நடிப்பை விட்டு விட்டதால், அவரது இடத்திற்கு மீரா வந்துள்ளார்.

இதற்கிடையே தெலுங்கிலும் புதிய படம் ஒன்று மீராவுக்குக் கிடைத்துள்ளது. அதில், சிவாஜியுடன் அதில் ஜோடி சேர்ந்துள்ளார் மீரா. அதேபோல ஜெகபதி பாபுவுடன் பங்காருபாபு என்ற படத்திலும் நடிக்கவுள்ளாராம்.

'அம்மா' கைவிட்டாலும் 'அண்டை வீட்டார்' கை கொடுத்திருப்பது மீராவை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X