சிங்களத்தில் 'சிலந்தி' மோனிகா!

By Staff

Monika
சிலந்தியில் படு பயங்கரமாக கவர்ச்சி காட்டி மிரள வைத்த மோனிகா, ஒரே 'ஜம்ப்'பாக சிங்களத்திற்குப் போயுள்ளார். அவர் நடித்துள்ள ரோஸா கெலே என்கிற படம் அங்கு விரைவில் ரிலீஸாகவுள்ளதாம்.

தமிழ்க் கலைஞர்களுக்கு அகில இந்திய அளவில் நல்ல மார்க்கெட் இருப்பது அகில உலகுக்கும் தெரிந்த விஷயம். இப்போது இந்தியாவைத் தாண்டி இலங்கையையும் தமிழ்க் கலைஞர்கள் அதிகம் ஈர்க்க ஆரம்பித்துள்ளனர்.

முதலில் பூஜா சிங்களப் படங்களில் நடிக்கப் போனார். 'இந்திய - இலங்கை கூட்டுத் தயாரிப்பு'தான் என்றாலும் கூட தாய் மொழியான சிங்ளத்தில் அதுவரை நடிக்கவில்லை பூஜா. தமிழ் நடிகையாகவே அறியப்பட்டவர் அவர்.

இந்த நிலையில், முதல் முறையாக அவர் நடித்த அஞ்சலிகா என்ற சிங்களப் படம் இலங்கையில் சூப்பர் ஹிட் ஆனது. ஹவுஸ் புல் போர்டுகள் திரையிடப்பட்ட தியேட்டர்களில் எல்லாம் தொங்க விடப்பட்டன. அது இலங்கையில் அதிசயமான விஷயமாம். இந்தப் படத்தைத் தொடர்ந்து மேலும் ஒரு படத்தையும் சிங்களத்தில் முடித்து விட்டார் பூஜா.

இதையடுத்து இந்திய நடிகைகள் மீது குறிப்பாக தமிழ் நடிகைகள் மீது இலங்கை திரைத் துறையினருக்கு திடீர் மோகம் பிறந்துள்ளது. தற்போது சிலந்தி பட நாயகி மோனிகாவும், சிங்களத்திற்குப் போயுள்ளார்.

ரோஸா கெலே என்கிற படத்தில் மோனிகாதான் நாயகியாம். அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் ரோஷன் ரனவாணா. இவர் சிங்களத்தின் 'காதல் மன்னன்' என பிரபலமானவர். இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. விரைவில் ரிலீஸாகவுள்ளது.

தமிழில் தட்டுத் தடுமாறிக் கொண்டுள்ள மோனிகாவுக்கு சிலந்திக்குப் பிறகு கிளாமரான ரோல்களில் நடிக்க பெரிய அளவில் வாய்ப்புகள் வருகின்றன. இந்த நிலையில் சைக்கிள் கேப்பில் சிங்களப் படம் ஒன்றில் நடித்து முடித்து விட்டார் மோனிகா.

இதற்கிடையே, தமிழில் நமீதாவுக்குக் கடும் போட்டியாக மோனிகா மாறி வருவதாக மார்க்கெட் நிலவரம் கூறுகிறது. காரணம், நமீதாவைத் தேடிப் போன இரு பட வாய்ப்புகள் அவர் பந்தா காட்டியதால், அப்படியே மோனிகாவை நோக்கி திரும்பியுள்ளதாம். இதனால் நமீதா சற்றே தடதடத்துக் காணப்படுகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X