twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நமீதாவின் தமிழ் 'முயற்சி'!

    By Staff
    |

    Namitha
    இனி புதிதாக நமிதா தமிழ் டிக்ஷ்னரி போட்டுவிட வேண்டியதுதான்... காரணம் இதுவரை ஹாய் மச்சான்ஸ்... எப்டிக்து... நீ என்கு வேணும்... என்றெல்லாம் வெளியில் மட்டுமே பேசி வந்த நமீதா, இனி திரையிலும் தனக்கு தானே பின்னணி பேசப் போகிறாராம்.

    அய்யோ... தாங்காதும்மா... என்று அலறும் உங்களுக்கு ஒரு சின்ன ஆறுதல், ஒரு தமிழ் வாத்தியாரிடம் இருமாத பயிற்சி எடுத்த பிறகே சொந்தக் குரலில் பேசப் போகிறாராம் நமீதா (அப்போ அந்த வாத்தியாருக்கு தமிழ் மறந்துபோவது நிச்சயம்!!).

    இப்போது அவர் நடித்துவரும் இந்திரா விழா படத்துக்காகத்தான் இப்படியொரு மெகா ரிஸ்க்கில் இறங்கியிருக்கிறார் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான கே.ராஜேஷ்வர்.

    நமீதா பேசுகிற தமிழை விடுங்கள்... தமிழை குஜராத்தியில் எழுதி வைத்துப் பேசாமல், நன்கு கற்றுக் கொண்டு பேச வேண்டும் என்ற நமீயின் தமிழ் முயற்சிக்கு ஒரு ஜே போடலாமே!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X