குடிக்காதீங்க மச்சான்ஸ்! - நமீதாவின் அட்வைஸ்

Namitha
ஆறரை உயர ஆல்கஹால் என்று வர்ணிக்கப்பட்ட நமீதா இப்போது நடிப்பதோடு நில்லாமல், சமூக சேவையையும் செய்து வருகிறார்.

அது குடிப்பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரம். இளைஞர்கள் எல்லோரும் எனக்கு மச்சான்ஸ்தான். இவர்கள் குடிக்கும் புகைக்கும் போதைக்கும் அடிமையாகிக் கெட்டுப் போகக் கூடாதே என்று கவலையாக இருக்கிறது. அதனால்தான் இந்தப் பிரச்சாரம் என்கிறார் நமீ.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

நான் கவர்ச்சியாக நடிப்பது உண்மையென்றாலும், அது அளவோடு இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன்.

சில நேரங்களில் சம்பளம் தருபவர்கள் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று கேட்கும்போது மறுக்க முடியவில்லை. அவர்கள் தரும் ஆடையைத்தான் அணிய வேண்டி உள்ளது. அதுதான் முகம் சுளிக்கும்படியான காட்சிகள் வரக் காரணமாகிவிடுகிறது.

சினிமா மட்டுமே உலகமல்ல... சினிமாவுக்கு வெளியே உள்ள மக்களையும் பார்க்க வேண்டியுள்ளது.

மச்சான்ஸ் எல்லாம் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி கெட்டப்போவது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. போதை, புகை பழக்கங்கள் இருக்கும் இளைஞர்கள் அவற்றை விட்டுவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவிகள் செய்து வாழ வேண்டும், என்பதே என் ஆசை," என்கிறார்.

நல்ல ஆசைதான்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X