பாட்டுக்கு மட்டும் கிளாமர்- நவ்னீத் கெளர்

கோலிவுட்டில் தனக்கென இன்னும் தனி இடத்தைப் பிடிக்காத நாயகியரில் நவ்னீத்தும் ஒருவர். விஜயகாந்த்துக்கு ஜோடியாக அரசாங்கம் படத்தில் ஜோடி போட்டவர் நவ்னீத்.
முதல் படத்திலேயே கிளாமராக நடிக்காமல் விட்டதால்தான் வாய்ப்புகளே வரவில்லையோ என்ற கவலை உள்ளதாம் நவ்னீத்துக்கு. இதனால் தன்னைத் தேடி வரும் வாய்ப்புகளில் கிளாமர் இருக்கிறதா என்பதை மறக்காமல் கேட்டு பின்னரே ஒப்புக் கொள்கிறாராம்.
இப்போது கருணாஸுக்கு ஜோடியாக அம்பாசமுத்திரம் அம்பானியில் அசத்தி வரும் நவ்னீத், இப்படத்தில் கிளாமரிலும், குடும்பப் பாங்கான நடிப்பிலும் என இரட்டைக் குதிரை சவாரியை மேற்கொண்டுள்ளாராம்.
இந்தப் படத்தில் கிளாமர், குடும்பப் பாங்கு மட்டுமல்லாமல் காமடியிலும் பின்னியுள்ளாராம். எல்லாமே நன்றாக வந்துள்ளதாம்.
ரசிகர்கள் நல்ல நடிப்பையும் விரும்புகிறார்கள், கிளாமரையும் ரசிக்கிறார்கள். எனவேதான் இரண்டையும் கலந்து தருகிறேன் என்கிறார் நவ்னீத்.
நல்லாத்தானே இருக்கு இந்த பாலிசியும்..!


Click it and Unblock the Notifications











