இனிமேல் இறப்பது போல நடிக்க மாட்டேன் - திரிஷா உறுதி

By Staff

Trisha with Vikram
பீமா படத்தில் நான் சாவது போல நடித்தது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது. எனவே இனிமேல் இதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் திரிஷா.

சீயான் விக்ரமும், திரிஷாவும் நடித்த பீமா படத்தில், திரிஷாவை சுட்டுக் கொல்வது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இது அவரது ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும், தோழியருக்கும், நட்பு வட்டாரத்திற்கும் பெரும் அதிருப்தியைக் கொடுத்து விட்டதாம்.

இப்படியெல்லாமா நடிக்க சம்மதிப்பது, இனிமேல் இதுபோல நடிக்கக் கூடாது என்று அனைவரும் திரிஷாவை வலியுறுத்தினார்களாம். குறிப்பாக அவரது அம்மா உமாவுக்கு திரிஷாவின் இறப்புக் காட்சியைப் பார்த்து அழுகையே வந்து விட்டதாம். இதனால் இனிமேல் இறப்பது போன்ற காட்சியில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார் திரிஷா.

இதுகுறித்து அவர் கூறுகையில், சினிமா என்றாலே காதல், கல்யாணம், விவாகரத்து, அம்மா வேஷம், வேலைக்கு செல்வது, சாவது என்று எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டி வரும். முதல் முறையாக பீமா படத்தில் சாவது போல நடித்திருந்தேன். படத்துக்கு அது தேவையாக இருந்தது.

ஆனால் அந்த காட்சியை பார்த்த என்னுடைய அம்மா அழுதுவிட்டார். இனி அதுபோல நடிக்க வேண்டாம் என்று கூறிவிட்டார். என்னுடைய நெருங்கிய தோழிகளும் அப்படி நடிக்க வேண்டாம், மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூறிவிட்டனர். எனவே இனி சாவது போல நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் திரிஷா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X