டோலிவுட்டுக்கு தமன்னா 'கா'!

ராசியில்லாத நடிகையாக அறியப்பட்ட தமன்னா தற்போது முன்னேற்ற ஏணியில் வேகமாக ஏறி வருகிறார். அதிலும் படிக்காதவன், அயன் என இரு ஹிட் படங்களைக் கொடுத்த பின்னர் அவர் கோலிவுட்டின் விருப்ப நாயகியாகி விட்டார்.
தற்போது புதிதாக இரு படங்களில் பெரிய சம்பளத்துக்குப் புக் ஆகியுள்ளார். தமிழில் நிலையான இடத்தைப் பிடிக்க முடிவு செய்து விட்ட தமன்னா, தெலுங்கில் நடிப்பதை விரும்பவில்லையாம். இதனால் தன்னைத் தேடி வந்த சில வாய்ப்புகளை நிராகரித்து விட்டாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போது நான் தமிழில் இரு படங்களில் நடிக்கிறேன். மேலும் இரு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
தெலுங்குப் படங்களில் நடிக்க மாட்டீர்களா என்று கேட்டால், தெலுங்கு இயக்குநர்களிடமிருந்து வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நேரம் ஒதுக்கத்தான் கால்ஷீட் இல்லை. சமீபத்தில் இரண்டு பெரிய பட வாய்ப்புகளை நிராகரிக்க நேரிட்டது என்கிறார்.
தற்போது பருத்தி வீரன் கார்த்திக்குடன் பையா, பரத்துடன் கண்டேன் காதலை ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார் தமன்னா.


Click it and Unblock the Notifications











