பூனம் பாஜ்வாவின் வித்தை

தெனாவெட்டு படம் பூனம் பாஜ்வாவுக்கு தமிழில் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. அடுத்து நல்ல வாய்ப்புகளை எதிர்நோக்கியிருந்த அவருக்கு கிடைத்தது சரவெடி.
இந்தப் படத்தில் ஜீவனுடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார் பூனம். இந்த நிலையில் மறுபடியும் ஜீவாவுடன் ஜோடி போடப் போகிறார்.
திரைவாணன் இயக்கும் வித்தை படத்தில் ஜீவாவுக்கு ஜோடி பூனம். மார்ச் 6ம் தேதி படப்பிடிப்பைத் தொடங்குகின்றனராம்.
ஆசின் இந்திக்குப் போய் விட்டார். நயனதாரா மார்க்கெட்டும் டல்லாகிக் கொண்டிருக்கிறது. இந்த கேப்பைப் பயன்படுத்தி தமிழ் சினிமாவில் உறுதியான இடத்தைப் பிடிக்க மும்முரமாக உள்ளாராம் பூனம்.
அதெல்லாம் சரி முதலில் ஜீவா, பிறகு ஜீவன், இப்போது மறுபடியும் ஜீவா என்று ஒரே ஜீவா மயமாக இருக்கிறதே ...!
Comments
சரவெடி சினிமா ஜீவன் ஜீவா தமிழ் தெனாவெட்டு பூனம் பாஜ்வா வித்தை cinema jeeva jeevan poonam bhajwa saravedi thenavattu vithai


Click it and Unblock the Notifications