மீண்டும் கிராமத்துக்குப் போகும் பூர்ணா

By Staff

Poorna
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்துக்குப் பின்னர் மீண்டும் கிராமத்து சப்ஜெக்ட்டுக்குத் திரும்புகிறார் பூர்ணா. தொடர்ந்து 3 படங்களில் அவருக்கு கிராமத்துப் பெண் வேடமாம்.

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படம்தான் பூர்ணாவை சினிமா ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது. ஆனால் அதற்கு முன்பே அவர் நடித்த படம் கொடைக்கானல்.

முனியாண்டி படம் மூலம் சினி உலகில் சுறுசுறுப்பான பூர்ணா இப்போது 4 படங்களை கையில் வைத்துள்ளாராம். அதில், 3 படங்கள் கிராமத்துப் படங்களாம்.

இவர் நடிப்பில் பார்த்திபனுடன் இணைந்து கலக்கியுள்ள வித்தகன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் பூர்ணாவுக்கு பிரேக் தரும் என்கிறார்கள்.

வித்தகன் படத்தில் என்ன விசேஷம் என்றால் படத்தில் நடித்த அனைவரையும் விட பூர்ணாவுக்குத்தான் வசனம் ஜாஸ்தியாம்.

இதுதவிர ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியாக துரோகி படத்தில் சாகசக் காட்சி ஒன்றிலும் நடித்துள்ளாராம் பூர்ணா. அது, அந்தரதத்தில் கயிற்றைக் கட்டி அதில் தொங்கியபடி பாடிய காட்சியாம்.

இவை தவிர ஜெய்யுடன் இணைந்து அர்ஜூனன் காதலி, கந்தக்கோட்டையில் நகுலன் ஆகியோருடனும் இணைந்து நடிக்கவுள்ளாராம் பூர்ணா.

கை நிறையப் படம், முகம் நிறைய மகிழ்ச்சி, அகம் நிறைய திருப்தி என குஷியாக இருக்கிறார் பூர்ணா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X