ராஜ் தாக்கரேவை விட நல்ல 'சொல்யூஷன்' என்னிடம் இருக்கு-ராக்கி

ஐட்டம் கேர்ள், செக்ஸி நடிகை, பெரிய வாய்க்காரர் என பல பட்டப் பெயர்களால் அழைக்கப்படுபவர் ராக்கி சாவந்த். இவர் புதிதாக ராக்கி கா இன்சாப் என்ற ரியாலிட்டி ஷோவை நடத்தப் போகிறார். ராக்கியின் சுயம்வரம் நடந்த என்டிடிவி இமேஜின் டிவியில்தான் இதுவும் நடக்கப் போகிறது.
இதுகுறித்து ராக்கி கூறுகையில்,
மும்பையில் அதிகரித்து வரும் வெளியூர்க்காரர்களின் பிரச்சினை குறித்து இப்போது பரபரப்பாக பேசுகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு நண்பர் ராஜ் தாக்கரே சொல்வதை விட சிறப்பான தீர்வு என்னிடம் உள்ளது. அதை எனது நிகழ்ச்சியைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
எனது புதிய ரியாலிட்டி ஷோ, பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பிளாட்பாரமாக அமையும். மும்பையின் பிரச்சினைக்காக நான் பலமுறை குரல் கொடுத்துள்ளேன்.அடிப்படையில் நான் ஒரு மகாராஷ்டிரப் பெண். எனவே எனக்கும் இந்தப் பிரச்சினைகள் குறித்துத்தெரியும்.
நமது சமூகத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன். சாலைப் பணிகளில் ஏற்பட்ட தொய்வு காரணமாக நான் மும்பை மாநகராட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்தியுள்ளேன்.
என்னால் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உள்ளன. அவை மீடியாவுக்கு நன்றாக தெரியும். அவற்றை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தால்தீர்க்க முயற்சிப்போம்.
அதற்காக நான் ராஜ் தாக்கரே போல சிந்திக்க மாட்டேன். உ.பியிலிருந்தும் சரி, பீகாரிலிருந்தும் சரி யார் வேண்டுமானாலும் இங்கு வரலாம். யாராக இருந்தாலும் அவர்கள் வெளிமாநிலத்தவர்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த நாடும், இந்த மாநிலமும் கடவுளால் கொடுக்கப்பட்டவை. யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும்வாழலாம். காரணம், நாம்அனைவருமே கடவுளின் குழந்தைகள்தான்.
இந்து, முஸ்லீம், சீக்கியர், கிறிஸ்தவர் என பாகுபாடு பார்க்க எனக்குப் பிடிக்காது. மும்பை அனைவருக்கும் சொந்தமானது. யார் வேண்டுமானாலும் இங்கு வந்து சம்பாதிக்கலாம், வாழலாம். இதில் என்ன தவறு என்றார் ராக்கி.
அப்ப, 'தாக்கரே அன் கோ'வின் அடுத்த அட்டாக், ராக்கியா?


Click it and Unblock the Notifications











