மீண்டும் அம்மனாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்!
அம்மன் வேட நடிப்பிலிருந்து கேஆர் விஜயா ரிட்டயரான பிறகு, அந்த இடத்தை பலமாகப் பிடித்துக் கொண்டுள்ளார் ரம்யா கிருஷ்ணன்.
பாளையத்து அம்மன், ராஜகாளியம்மன் என தொடர்ந்து அம்மன் வேடங்களில் நடித்த அவர், சமீபத்தில் வெளியான குட்டிப் பிசாசு படத்திலும் அம்மனாக தோன்றினார்.
இப்போது தெலுங்குப் படமொன்றில் மதுரை மீனாட்சி அம்மன் வேடத்தில் நடிக்கிறார் ரம்யா. இந்த படத்தை நம்சாவம்பி இயக்குகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.
தெலுங்கில் ஏற்கெனவே நடிகை மீனாவும் அம்மன் வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications