கந்தசாமி படத்துக்காக ரூ.6 கோடி நகைகள் அணிந்து ஸ்ரேயா டான்ஸ்!

கந்தசாமி படத்துக்காக சமீபத்தில் படமாக்கப்பட்ட ஒரு பாடல் காட்சியில்தான் இப்படித் தோன்றி அசத்தினார் ஸ்ரேயா.
கலைப்புலி எஸ்.தாணு, எக்கச்சக்க பொருட்செலவில் இரண்டு ஆண்டுகளாகத் தயாரித்துவரும் படம் 'கந்தசாமி'.
விக்ரம், ஸ்ரேயா ஜோடியாக நடிக்கிறார்கள். சுசி கணேசன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
ஸ்ரேயா பங்குபெறும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி இருந்தது. இந்தப் பாடல் காட்சிக்காக கடந்த 13-ம் தேதி இயக்குனர் சுசி கணேசன், ஸ்ரேயா உட்பட படக்குழுவினர் இத்தாலி சென்றனர். அங்கு ஸ்ரேயா சம்பந்தப்பட்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் ஸ்ரேயா, ரூ.6 கோடி மதிப்பிலான வைர நகைகள் அணிந்து நடித்தார்.
இந்த நகைகளை பொருத்துவதற்காக ரூ. 26 லட்சத்தில் பிரத்யேகமாக பாரம்பரிய உடை தயாரிக்கப்பட்டது. நகைகளுக்கான வாடகை மட்டும் ஒரு நாளுக்கு ரூ.5 லட்சமாம்.
இத்தாலியின் புதிய லொக்கேஷன்களில் இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் பாடல் காட்சி இருக்கும் என்கிறார்கள் (வந்தா தெரிஞ்சிடப் போகுது!).
இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸாகிவிடும் என்றார்கள். சம்மர் ட்ரீட் என விளம்பரம் கூட செய்தார்கள். இதோ இப்போது அடுத்த சம்மர் வந்தேவிட்டது. தாணுவுக்கு மட்டும் ஏன்தான் இப்படியெல்லாம் ஆகிறதோ தெரியவில்லை.
இந்த வருஷமாவது ரிலீஸ் ஆகுமா? பார்க்கலாம்!!


Click it and Unblock the Notifications











