'மூன்றாம் விதி' ஷயாலி!

By Staff

Sayali Bhagat
நியூட்டனின் மூன்றாம் விதி படத்தின் மூலம் தமிழுக்கு வந்துள்ளார் பாலிவுட் புயல் ஷயாலி பகத்.

எஸ்.ஜே.சூர்யா மீண்டும் ஒரு முறை நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் படம்தான் நியூட்டனின் மூன்றாம் விதி. தாய் முத்துச் செல்வன் இயக்கி வருகிறார். படத்தில் சூர்யாவுக்கு வித்தியாசமான வேடம். படம் பிரமாதமாக வரும் என்று நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.

சூர்யாவுக்கு இதில் ஜோடியாக வருபவர்தான் ஷயாலி பகத். இந்தியில் வெளியான தி டிரெய்ன் படத்தில் பிரமிக்க வைத்தவர்தான் ஷாயாலி. இந்தப் படம் வேறு எதுவும் அல்ல, தமிழில் சரத்குமார், ஜோதிகா நடிப்பில் வெளியான கெளதம் மேனனின் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் ரீமேக்தான்.

தற்போது தெலுங்கில் படு பிசியாக வலம் வருகிறார். இப்போது தமிழுக்கும் வந்துள்ளார். தமிழுக்கு வந்திருப்பது ஷயாலிக்கு பெரும் சந்தோஷமாக உள்ளதாம். ஏற்கனவே என்னைத் தேடி சில தமிழப் பட வாய்ப்புகள் வந்தன.

ஆனால் அவற்றை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலை அப்போது. ஆனால் இப்போது என்னைத் தேடி வந்த நியூட்டனின் மூன்றாவது விதி படத்தின் கதை எனக்குப் பிடித்திருந்தது. எனவே கப்பென்று பற்றிக் கொண்டு விட்டேன் என்கிறார்.

தமிழ் சினிமாவில் நுழைந்துள்ள இந்த மும்பை ஷயாலி, எத்தனை பேரை கலங்கடிக்கப் போகிறாரோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X