சாஃப்ட், திரில், ஷெரில்!

By Staff

Sheryl Pinto
தெலுங்கில் முதல் முறையாக நடிக்கப் போகும் சத்யமேவ ஜெயதே படத்தில் மென்மையான கேரக்டரிலும், அடிதடி ஆக்ஷனிலும் பட்டையைக் கிளப்பியுள்ளதாக சந்தோஷத்துடன் கூறுகிறார் ஷெரில் பின்டோ.

விஜயகாந்த் நடித்த அரசாங்கம் படம்தான் ஷெரில் பின்டோவுக்கு முதல் படம். இப்போது 2வது முறையாக எங்கள் ஆசான் படத்திலும் விஜயகாந்த்துடன் இணைந்துள்ளார் ஷெரில்.

எங்கள் ஆசான் படத்தில் நடித்த அனுபவத்தை கேட்டால் கதை கதையாக கூறுகிறார்.

எங்கள் ஆசான் படத்தோட ஷூட்டிங் பொள்ளாச்சி பக்கத்தில் நடந்தது. அப்போது அது மே மாதம் (போன வருஷம்). நல்ல வெயில், கடும் வெயிலுக்கு மத்தியில் ஷூட்டிங்கை நடத்தினார்கள்.

இருந்தாலும் எனக்கு அது தெரியவில்லை. காரணம் பொள்ளாச்சி பகுதியின் வளமையும், பசுமையும். அந்த சூழல் என்னை வெகுவாக கவர்ந்திழுத்தது.

விஜயகாந்த் சார் மிகவும் அனுசரணையாக இருந்தார். எப்படி நடிக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தார். அது உதவியாக இருந்தது என்றார் ஷெரில்.

இப்போது தெலுங்கிலும் அறிமுகமாகப் போகிறாராம் ஷெரில். ஜீவிதா ராஜசேகர்தான் அப்படத்தின் இயக்குநர். படத்துக்குப் பெயர் சத்யமேவ ஜெயதே.

இப்படத்தில் முதல் பாதியில் மென்மையான கேரக்டரிலும், 2வது பாடியில் அடிதடி தூள் பண்ணும் ஆக்ஷன் ரோலிலும் கலக்குகிறாராம் ஷெரில்.

எனக்கு விஜயசாந்தி போல ஆக்ஷன் ரோல்களில் நடிக்க ஆர்வம் அதிகம். அப்படிப்பட்ட ரோல் இப்போதுதான் கிடைத்துள்ளது. பின்னி எடுக்க காத்திருக்கிறேன் என்கிறார் முறுக்கேறும் முகத்துடன்.

தமிழில் தற்போது ஷெரில் கைவசம் உள்ள படம் வாடா. சுந்தர்.சி.க்கு ஜோடியாக நடிக்கிறார். படம் முழுக்க கிளாமரில் கிளுகிளுப்பூட்டுகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X