ட்விட்டர் 'கேங்'கில் இனி ஷில்பாவும்!

இப்போது யாரைப் பார்த்தாலும் ட்விட்டர் புராணம்தான் பாடுகிறார்கள். அந்த அளவுக்கு கம்ப்யூட்டர், இன்டர்நெட் தெரிந்த அனைவரையும் ட்விட்டர் ஆட்டிப்படைத்து வருகிறது.
பாலிவுட் திரையுலகினர் சமீப காலமாக நடிப்பதை விட ட்விட்டரில் செய்திகளைப் பகிர்ந்து கொள்வதில் அபரிமித ஆர்வம் காட்டுகின்றனர்.
கரண் ஜோகர் புண்ணியத்தில் ஷாருக் கான் உள்பட பாலிவுட்டைச் சேர்ந்த பலரும் 'ட்வீட்ட' ஆரம்பித்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது ஷில்பா ஷெட்டியும் அதில் இணைந்துள்ளார்.
ஷில்பா தற்போது லண்டனில் தனது கணவருடன் உள்ளார். ஐபிஎல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளராகவும் இருக்கிறார். இந்த நிலையில் ட்விட்டர் மூலம் தனது அணியை புரமோட் செய்ய முடிவெடுத்து ட்விட்டருக்குள் நுழைந்துள்ளார்.
நேற்றுதான் ட்விட்டரில் சேர்ந்தாராம் ஷில்பா. முதல் செய்தியாக, ஹலோ, நான் ட்விட்டரில் புதிதாக இணைந்துள்ளேன். லண்டனில் இருக்கிறேன். ஐபிஎல் பதட்டம் துரத்திக் கொண்டிருக்கிறது. புதிய மஸ்கட்டை - மூச்சு சிங்- உருவாக்கியுள்ளோம். ரொம்ப அழகாக இருக்கிறது என்று கூறியுள்ளார் ஷில்பா.
ஷில்பா ஷெட்டியை, வரவேற்று பதில் ட்வீட் அனுப்பியுள்ளார் கரண் ஜோகர்.


Click it and Unblock the Notifications











