ஷமீதாவுக்காக காத்திருக்கும் ஷில்பா

சமீபத்தில் ஷில்பா ஷெட்டிக்கும், லண்டன் என்.ஆர்.ஐ ராஜ் குந்த்ராவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் ஷில்பாவின் தங்கையான நடிகை ஷமீதா ஷெட்டி கலந்து கொள்ள முடியவில்லை. காரணம், அவர் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டிருப்பதால்.
இதனால் வருத்தமடைந்த ஷில்பா, தற்போது தனது தங்கை திரும்பி வந்த பின்னர் அவரது விருப்பத்திற்கேற்ப தனது திருமண தேதியை முடிவு செய்யப் போகிறாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எல்லோருக்குமே திருமணத் தேதியை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஷமீதா வந்தவுடன்தான் நான் திருமணத் தேதியை அறிவிக்கப் போகிறேன். முதலில் ஷமீதா வெளியே வரட்டும். பின்னர் எனது திருமணத் தேதியை சொல்கிறேன் என்கிறார்.
More from Filmibeat
கல்யாணம் தேதி ராஜ் குந்த்ரா ஷமீதா ஷெட்டி ஷில்பா ஷெட்டி dates raj kundhra shamitha shetty shilpa shetty wedding


Click it and Unblock the Notifications











