பெற்றோர் பிறந்த நாளில் ஸ்ரேயா தந்த 'தண்ணிப் பார்ட்டி'

இது பற்றி அவர் கூறும் போது எனது தாய், தந்தை இருவருக்குமே செப்டம்பர் 26-ந் தேதிதான் பிறந்த நாள். அப்பா காலை 5.30 மணிக்கு பிறந்தார். அம்மா மாலை 5.30 மணிக்கு பிறந்தார் (அதாவது வேறு வேறு ஆண்டில்)
இருவரின் பிறந்த நாளையும் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்தேன். வீட்டில் சிறிய பூஜைகள் செய்தோம். அதன் பிறகு அவர்களுக்கு விசேஷ விருந்து கொடுத்தேன், என்றார்.
இந்த விசேஷ விருந்தில்,உயர்ரக மதுபானங்கள் பரிமாறப்பட்டதாம். நெருக்கமான உறவினர்கள்,தோழிகளும் இவ்விருந்துக்கு வந்து மதுவில் குளித்துத் திளைத்துக் களித்தார்களாம்.
கடந்த ஆண்டு தனது பிறந்த நாளுக்கும் இதே போல பெரிய மதுவிருந்து வைத்து, டம்ளரும் கையுமாக விடிய விடிய கொண்டாடினார் ஸ்ரேயா என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications