கரணுக்கு ஸ்னேகா ஸாரி!

குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் கலக்கி, கமல்ஹாசனின் நம்மவர் மூலம் தமிழுக்கு வந்த கரண், வில்லனாக, குணச்சித்திர நடிகராக ஏகப்பட்ட படங்களில் நடித்தவர்.
கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டவர். மிகப் பெரும் தாமதத்திற்குப் பின்னர் ஹீரோ அவதாரம் எடுத்தார். வெற்றிகரமான ஹீரோவாகவும் இப்போது கலக்கிக் கொண்டிருக்கும் கரண் நடித்துள்ள காத்தவராயன் படம் முடிந்து விட்டது.
அடுத்து காளி, கந்தா என சில படங்களை கையில் வைத்திருக்கிறார். இந்த நிலையில் கந்தா படத்தில் தனக்கு ஜோடியாக ஸ்னேகா நடித்தால் நலமாக இருக்கும் என விரும்பினார் கரண். காரணம், சினேகா மீது அவருக்கு அவ்வளவு கிரேஸி. எப்படியாவது ஒரு படத்தில் அவருடன் இணைந்து விட வேண்டும் என்று பேரார்வத்தில் இருந்தார் கரண்.
கந்தா படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க ஸ்னேகாவுக்கு கூடுதல் சம்பளத்திற்கும் தயாரிப்பாளரிடம் ரெக்கமன்ட் செய்து வைத்திருந்தார். ஆனால் அப்படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம் சினேகா.
என்ன காரணம் என்று கூடக் கூறாமல் ஒரேயடியாக படத்தை நிராகரித்து விட்டாராம் ஸ்னேகா. இதனால் பெரும் விசனத்தில் மூழ்கியுள்ளாராம் கரண்.
கரணுக்கு ஸ்னேகா கருணை காட்ட மறுத்தது ஏனோ?


Click it and Unblock the Notifications











