செல்வராகவன் மீது கோபமில்லை; சந்தித்தால் பேசுவேன்! - சோனியா அகர்வால்

By Chakra

Sonia Agarwal
செல்வராகவன் மீது எனக்கு இப்போது கோபமில்லை. அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் முகத்தைத் திருப்பிக் கொள்ளமாட்டேன். நிச்சயம் பேசுவேன், என்கிறார் அவரது முன்னாள் மனைவியும் நடிகையுமான சோனியா அகர்வால்.

சோனியா அகர்வாலை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் செல்வராகவன். காதல் கொண்டேன் படம் மூலம் திரைக்கு வந்தார்.

இருவருக்கும் படப்பிடிப்பின்போதே காதல் மலர்ந்தது. 4 ஆண்டுகள் வரை காதலித்தனர். ஆனால் மீடியாவில் தங்கள் காதலை மறைத்தனர். பின்னர் ஒரு வழியாக 2006-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தை செல்வராகவன் இயக்கிய போது அதில் நடித்த ஆன்ட்ரியாவுக்கும் செல்வராகவனுக்கும் தொடர்பு ஏற்பட, இதனால் கணவனும் மனைவியும் பிரிந்தனர். குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தனர். அடுத்த 6 மாதங்களில் சட்டப்படி பிரிந்து விட்டனர்.

இப்போது, சோனியா அகர்வால் மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார். வானம் படத்தில் சிம்புவுக்கு நாயகியாக நடிக்கிறார். சில தெலுங்குப் படங்களிலும் நடிக்கிறார்.

இந்த நிலையில், விவாகரத்துக்குப் பின்னான வாழ்க்கை, செல்வராகவன் பற்றிய அவரது இப்போதைய கருத்து குறித்து கேட்கப்பட்டது.

அவர் கூறுகையில், "பொதுவாகவே விவாகரத்துக்குப் பிறகு முன்னாள் கணவனைும் மனைவியும் எதிரிகள் போல முறைத்துக் கொண்டு செல்கின்றனர். இது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

எனது முன்னாள் கணவரை எங்காவது பார்க்க நேர்ந்தால் நிச்சயம் கோபப்பட மாட்டேன். இனி கோபப்பட என்ன இருக்கிறது. அப்படி நடந்து கொள்ள அவசியம்தான் என்ன?

ஒரு வேளை நானும் அவரும் சந்தித்துக் கொண்டால், அவருடன் கை குலுக்கிவிட்டு ஒரு புன்னகையுடன் கடந்து செல்லவே விரும்புகிறேன்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X