கனவுக் காட்சிளில் கிளாமராக நடிப்பதில் தவறில்லை - சுனேனா

புதுமுகம் சச்சினுக்குச் ஜோடியாக நடித்துள்ளார் சுனேனா, யாதுமாகி படத்தில். முந்தைய இரு படங்களிலும் மாடர்ன் பொண்ணாக வந்த சுனேனா, இப்படத்தில் கும்பகோணம் டிகிரி காபியாக அதாவது குடும்பக் குத்துவிளக்காக நடித்துள்ளாராம்.
ஆனாலும் பாடல் காட்சிகளில் மட்டும் கிளாமர் களேபரமாம். ஏன் இப்படி என்றார், இப்படத்தில் நான் பயந்த சுபாவம் கொண்ட, பாவாடை தாவணியில் வரும் பெண்ணாக நடித்துள்ளேன்.
மாடர்ன் உலகம் என்றால் என்னவென்றே தெரியாத பெண்ணாக எனது கேரக்டர் உள்ளது. அதேசமயம், சச்சின் மாடர்ன் பாய் ஆக வருகிறார்.
இதில் சச்சினுடன் நான் கற்பனையில் பாடல்களைப் பாடுவதாக காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. கிராமத்துப் பெண்ணான நான் மாடர்ன் பெண்ணாக நினைத்துக் கொண்டு கனவு காணும் காட்சிகள் இவை. எனவே இந்தப் பாடல்களில் மாடர்ன் டிரஸ்களில், சற்று கிளாமராக நடித்துள்ளேன்.
இதில் தவறு ஏதும் இல்லை. அதேசமயம், படத்தில் நான் ஹோம்லியாகத்தான் நடித்துள்ளேன். இரண்டும் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்கிறார் சுனேனா.
ரசிகர்களுக்கு சுனேனாவைப் பிடித்து விட்டது. இனி அவர் எப்படி நடித்தால் என்ன பிடிக்காமலா போய் விடும்..


Click it and Unblock the Notifications











