2வது கல்யாணம் செய்வேன் - சொர்ணமால்யா உறுதி

சன் டிவியில் இளமை புதுமை நிகழ்ச்சி மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்களிடையே அறிமுகமானவர் சொர்ணமால்யா. அதன் பிறகு பெரும் பாப்புலர் ஆன சொர்ணமால்யா மணிரத்தினத்தின் அலைபாயுதே மூலம் சினிமாவுக்கும் வந்தார்.
டிவியில் இருந்தவரை அமைதியான பிரபலமாக அறியப்பட்ட சொர்ணமால்யா சினிமாவுக்கு வந்த பிறகுதான் பல மாற்றங்களில் சிக்கினார்.
2002ல் கல்யாணம் செய்த சொர்ணமால்யா, அடுத்த ஆண்டே விவாகரத்து செய்தார். அதன் பின்னர் முழு நேர நடிகையாக மாறினார். ஆனால் அவருக்கேற்ற ரோல்கள் கிடைக்கவில்லை. இதனால் அவரது திரை வாழ்க்கை அமைதியான கடல் போல காணப்பட்டது.
இடையில் சங்கர மட சிக்கலிலும் மாட்டிக் கொண்டு மீண்டார். சமீபத்தில் இரண்டு பெரும் சர்ச்சைகளில் சிக்கினார் சொர்ணமால்யா. ஒன்று, பிரகாஷ் ராஜுடன் கிசுகிசுக்கப்பட்டது. இன்னொன்று அவரது முன்னாள் காதலருடன் ஆழமாக கொடுத்துக் கொண்ட முத்தக் காட்சி புகைப்படம் வெளியானது.
ஆனால் இந்த சர்ச்சைகளையெல்லாம் தாண்டி சொர்ணமால்யா வழக்கம் போலவே வீசகர புன்னகையுடன் வளைய வந்து கொண்டுள்ளார். இதற்கெல்லாம் கவலைப்பட முடியுமா என்றும் கேட்கிறார்.
எனது முதல் மண வாழ்க்கை தவறானதாகி விட்டது. அதற்காக வருத்தப்படவில்லை. சில நேரங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் தவறாகி விடுவதைப் போலவே இதுவும் நடந்து விட்டது. அதற்காக நான் உடைந்து போய் விடவில்லை. நிச்சயமாக எனக்குப் பொருத்தமான நபர் அமைந்தால் மறுமணம் செய்து கொள்வேன் என்கிறார் சொர்ணமால்யா.


Click it and Unblock the Notifications











