ரேவதி சீரியலில் சொர்ணமால்யா

ஜீ தமிழ் தொலைக்காட்சிக்காக நடிகை ரேவதி புதிய தொடர் ஒன்றை தயாரிக்கிறார். அவருடன் நடிகை ரோகினியும் கை கோர்த்துள்ளார். மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் சார்பி்ல் தயாரிக்கப்படும் இந்த சீரியலை சரவணன் இயக்குகிறார்.
இந்தத் தொடருக்கு யாதுமாகி நின்றாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில், சொர்ணமால்யா, நீரஜா, ஸ்ரீரேகா என மூன்று நாயகிகள்.
மூன்று பேருக்குமே பவர்புல் கேரக்டர்களாம். இதுகுறித்து ரேவதி கூறுகையில், இந்தக் கதையைக் கேட்டதுமே சீரியலாக தயாரிக்கலாம் என்று முடிவு செய்தேன்.
மூன்று நடுத்தர வயதுப் பெண்களின் கதை இது. சொர்ணமால்யா, நீரஜா, ஸ்ரீரேகா நடித்துள்ளனர். சமூகப் பிரச்சினைகளையும் இந்தத் தொடர் அலசுகிறது என்றார்.
சொர்ணமால்யா கூறுகையில், இப்படி ஒரு முதிர்ச்சியான பாத்திரத்தை இதுவரை நான் செய்ததில்லை. இந்தக் கதையை என்னிடம் கூறி கேரக்டர் பற்றிக் கூறியதுமே நான் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டேன். அதற்கு இன்னொரு காரணம் ரேவதியின் சீரியல் இது என்பதால். அவர் மிகப் பெரிய புத்திசாலி. அவருடன் இணைவது பெருமையாக உள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications











