ரஹ்மான் விருது..த்ரிஷா போட்ட ஆட்டம்!

வழக்கத்தைவிட அதிகாலையிலேயே விழித்துக் கொண்ட த்ரிஷா, டிவி முன்பு ஆர்வத்துடன் அமர்ந்து கொண்டாராம்.
காரணம், ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைக்கும் என்ற ஆர்வத்தில்.
தொலைக்காட்சிப் பெட்டியின் சத்தத்தை மிக அதிகமாக வைத்துக் கொண்ட த்ரிஷா, மேடையில் ரஹ்மான் பெயர் உச்சரிக்கப்பட்டதும் கட்டிலின் மீது ஏறி நின்று ஊ...ஆ... ஓ என உற்சாகத்தில் கத்த ஆரம்பித்துவிட்டாராம்.
பக்கத்து அறைகளிலிருந்த விருந்தினர்கள் என்னவோ ஏதோவென்று பதறிவிட்டார்களாம். அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், வேகமாக த்ரிஷா ரூமுக்கு வந்து கதவைத் தட்டியிருக்கிறார்கள் ஹோட்டல் சிப்பந்திகள்.
காரணத்தைத் தெரிந்து கொண்டவர்கள், 'ஆட்டத்தைக் கொஞ்சம் குறைச்சுக்கங்க அம்மணி...' என அட்வைஸ் பண்ணிவிட்டுப் போனார்கள்.
"ஆனா... அதப் பத்தியெல்லாம் எனக்கு கவலையில்ல. ஏன்னா நான் ஏ.ஆர். ரகுமானின் தீவிர ரசிகை. நான் நடித்த எனக்கு 20 உனக்கு 18, ஆயுத எழுத்து ஆகிய படங்களுக்கு அவர்தான் இசை.
ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கிறார் என்று கேள்விப்பட்டதுமே அப்படங்களின் கதையை கூட நான் கேட்கவில்லை. அடுத்த படமான விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்கும் அவர்தான் இசை அமைக்கிறார். அந்த படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழாவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
ஏன் தெரியுமா... விழாவில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் பக்கத்துல உட்காரும் வாய்ப்பு கிடைக்குமில்ல...!' என்கிறார் த்ரிஷா.
அப்படி போடு...!


Click it and Unblock the Notifications











