கோலிவுட்டில் புதிய 'அம்மா'!

தமிழ் சினிமாக்காரர்கள் கைவசம் உள்ள முக்கியமான சென்டிமென்ட் கேரக்டர் அம்மா. அம்மா கேரக்டரில் முன்பெல்லாம் பழம்பெரும் நடிகைகள்தான் பெரும்பாலும் நடிப்பார்கள்.
ஆனால் இப்போதெல்லாம் இளம் அம்மாக்களைத்தான் கோலிவுட்டினர் விரும்புகின்றனர். சீதா, சரண்யா போன்ற நடுத்தர வயது நடிகைகள் இப்போது அம்மா கேரக்டரில் நிறைய நடித்து வருகின்றனர்.
இந்த வரிசையில் புதிய அம்மாவாக வந்து சேர்ந்துள்ளார் யுவராணி. தற்போதைய அம்மா நடிகைகளிலேயே இவர்தான் இளையவராக இருப்பார் என்று தெரிகிறது.
ஜெகன்மோகினி படத்தில் ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்கப் போக இவரைத் தேடி இப்போது நிறைய அம்மா கேரக்டர்கள் வருகிறதாம்.
இதனால் ஏற்கனவே பீல்டில் இருக்கும் அம்மா நடிகைகள் சிலருக்கு பீதி ஏற்பட்டுள்ளதாம்.
Comments


Click it and Unblock the Notifications