நான் வில்லியா?: சந்தியா

கடந்த ஆண்டு சந்தியா நடித்து கண்ணாமூச்சி ஏனடா மற்றும் கூடல் நகர் என இரு படங்கள் வெளியாகின. அதற்கு முந்தைய ஆண்டு வல்லவனில் நடித்திருந்தார். இந்த ஆண்டும் சந்தியா வசம் சில சூப்பர் படங்கள் உள்ளன.
தூண்டில் விரைவில் வெளியாகவுள்ளது. மஞ்சள் வெயிலும் ரிலீஸுக்கு காத்துள்ளது. இரு படங்களும் தனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்ற நம்பிக்கையில் உள்ளார் சந்தியா.
சமீபத்தில் சந்தியாவைப் பற்றி ஒரு செய்தி வெளியானது. மலையாளத்தில் உருவாகும் டி17 என்ற படத்தில் வில்லத்தனமான கேரக்டரில் அவர் நடிப்பதாக அந்த செய்தி கூறியது.
ஆனால் அதை மறுக்கிறார் சந்தியா. இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஒருபோதும் வில்லத்தனமான கேரக்டரில் நடிக்க மாட்டேன். அந்த மலையாளப் படத்தில் சமூகத்தால் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத குணாதிசயம் உள்ள பெண் வேடத்தில்தான் நடிக்கிறேன். அதை நெகட்டிவ் ரோல் என்று கூற முடியாது என்றார் சந்தியா.
தற்போது தமிழில் ஷக்தியுடன் நடிக்கவுள்ள மகேஷ், சரண்யா மற்றும் சிலர் படத்தில் தனக்கு நல்ல கேரக்டர் என்று சந்தோஷமாக கூறுகிறார் சந்தியா. பொம்மரிலு படத்தில் ஜெனீலியா நடித்ததைப் போன்ற அட்டகாசமான கேரக்டராம் இது.
படம் வரட்டும், பார்த்து விட்டுச் சொல்கிறோம்.


Click it and Unblock the Notifications











