சிம்ரனை இயக்கும் ஸ்ரீபிரியா

சினிமாவில் பெரிய ரவுண்டு வந்து ஓய்ந்த சிம்ரன், திருமணமாகி, குழந்தையையும் பெற்றுக் கொண்டு, 2வது இன்னிங்ஸுக்கு முயன்று அதில் தோல்வி அடைந்து விட்டார்.
இருந்தாலும் சற்றும் மனம் தளராத சிம்ரன் இப்போது புதுப் பாதையில் புகுந்து புதிய புயலைக் கிளப்ப புறப்பட்டுள்ளார்.
புத்தம் புதிய கான்செப்ட்டுடன் கூடிய ஒரு புதிய டிவி சீரியலில் தலை காட்டுகிறார் சிம்ரன். இந்த மெகா சீரியலுக்கு, இதை சீரியல் என்று கூற முடியாது. அப்படி ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சிக்கு சிம்ரனின் பெயரையே வைத்து விட்டனர். அதாவது சிம்ரன் சின்னத்திரை என்பதுதான் இந்த நிழ்ச்சியின் பெயர்.
இது வித்தியாசமான நிகழ்ச்சி. அதாவது மொத்தம் 12 மாதங்கள் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். மாதத்திற்கு ஒரு கதையை எடுத்து தொடராக ஒளிபரப்பவுள்ளனர். மொத்தம் 12 கதைகள் ஒளிபரப்பாகும். அனைத்துக் கதைகளிலும் சிம்ரன்தான் நாயகி. ஆனால் கதை மட்டும் வேறு வேறாக இருக்கும்.
அத்தனை கதைகளையும் இயக்கப் போகிறவர் ஸ்ரீபிரியா. கதை சுஜாதா.
ஜெயா டிவியில் ஒளிபரப்பாகவுள்ள இந்த வித்தியாசமான தொடரை, கூட்டாக இணைந்து தயாரிக்கிறது பிரமீட் சாய்மீரா நிறுவனம்.
இந்தத் தொடர் தனக்கு புது உற்சாகத்தை அளித்துள்ளதாகவும், தமிழ்க் குடும்பங்களின் நெஞ்சங்களை மீண்டும் தொட்டுத் தொடரப் போவதாக சிம்ரன் கூறுகிறார்.


Click it and Unblock the Notifications











