சென்னைக்கு வந்த ரஞ்சிதா மீண்டும் தலைமறைவு!

By Chakra

Ranjitha
சென்னை: அமெரிக்காவுக்குப் போய் விட்டதாக கூறப்பட்ட நடிகை ரஞ்சிதா ரகசியமாக சென்னைக்கு வந்திருந்தார். ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த அவர் தற்போது மீண்டும் மாயமாகி விட்டாராம்.

நித்தியானந்தா சாமியாருக்கு அந்தரங்கமான முறையில் பணிவிடைகளைச் செய்த நடிகை ரஞ்சிதாவை வீடியோல் படம் பிடித்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் நித்தியானந்தாவின் சிஷ்யர் லெனின்கருப்பன்.

மிகவும் அந்தரங்கமான காரியங்களில் நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் ஈடுபட்டிருந்த அந்தக் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

இந்த நிலையில் நித்தியானந்தாவை இமாச்சல் பிரதேச மாநிலத்தில் வைத்துப் பிடித்தது கர்நாடக போலீஸ். ஆனால் ரஞ்சிதா மட்டும் இதுவரை சிக்கவே இல்லை. அவர் இங்கிருக்கிறார், அங்கிருக்கிறார் என்று மட்டும் செய்திகள் வருகின்றன. ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்பது உறுதியாகத் தெரியாமல் உள்ளது. இடையில் அவர் அமெரிக்காவுக்கு ஓடி விட்டார் என்று செய்திகள் கூறின

இந்த நிலையில் சமீபத்தில் ரஞ்சிதா ரகசியமாக சென்னைக்கு வந்ததாக நேற்று செய்திகள் வெளியாகின. மேலும், ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கும் அவர் பேட்டி அளித்திருந்தார். அதில் நித்தியானந்தாவுடனான சந்திப்பு, அனுபவம் குறித்து புத்தகம் எழுதுவதாக கூறியிருந்தார் ரஞ்சிதா. இந்த நிலையில் தற்போது ரஞ்சிதா மீண்டும் தலைமறைவாகி விட்டாராம்.

தனது சென்னை ரகசியப் பயணத்தின்போது தனது வக்கீலை ரஞ்சிதா சந்திததாக தெரிகிறது. போலீஸில் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பது சாதகமாக இருக்குமா அல்லது பாதகமாக இருக்குமா என்பது குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

ரஞ்சிதாவின் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தால கர்நாடக போலீஸார் பெரும் எரிச்சலைடந்துள்ளனராம். கோர்ட் மூலம் கைது வாரண்ட் பெற்று அவரைப் பிடிக்க தற்போது முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X