சங்கர் கணேஷ் மகன்-நடிகை ஷமிதா காதல் திருமணம்!

பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகன் ஸ்ரீ, தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். சிவசக்தி, நாணல், ருத்ரா, மேகலா ஆகிய தொடர்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கும் இப்போது சிவசக்தி சீரியலில் நடித்து வரும் பவானி என்கிற ஷமிதாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இந்தக் காதலுக்கு பெற்றோர் தரப்பிலும் பச்சைக் கொடி காட்டப்பட்டது. இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள். அதைத்தொடர்ந்து ஸ்ரீ-ஷமிதா திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
வருகிற 30-ந் தேதி காலை 7.30 மணிக்கு, சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கார்டு இன் ஹோட்டலில் நடக்கிறது ஸ்ரீ-ஷமிதா திருமணம் நடக்கிறது.
அதே ஹோட்டலில், மே 1-ந் தேதி மாலை 6.30 மணிக்கு திருமண வரவேற்பு விமரிசையாக நடக்கிறது.
Comments
காதல் சங்கர் கணேஷ் சினிமா தமிழ் திருமணம் பாண்டவர் பூமி ஷமிதா ஸ்ரீ cinema pandavar bhoomi serial shamitham shankar ganesh sri television


Click it and Unblock the Notifications