மீண்டும் நடிக்க வரும் உமா!!

நடிகை சுமத்திராவின் மூத்த மகள் உமா. வானவில் படத்தில் அறிமுகமானார். தென்றல் படத்தில் பார்த்திபன் ஜோடியாக நடித்துப் புகழ்பெற்றார். பின்னர் சொக்கத் தங்கம், இலக்கணம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். குடும்பப் பாங்கான வேடங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்தார்.
ஆனால் எதிர்ப்பார்த்த வாய்ப்புகள் அமையாத நிலையில் திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கினார். இனி படங்களில் நடிப்பதில்லை என்றும் அறிவித்தார்.
திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில், இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார் உமா. தனக்கேற்ற வேடங்களில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
Comments


Click it and Unblock the Notifications